கருணாநிதி பெயர் வைப்பதை நிறுத்துங்கள்..தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!
Stop naming after Karunanidhi Dr Krishnasamy urges the Tamil Nadu government
அரசு கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிகூறியதாவது:
பொட்டலூரணி பகுதியில் மீன் கழிவு ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற அக்டோபர் 16-ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் செருப்பு விசிய சம்பவம் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசு சார்பில் தற்போது பேருந்து நிலையங்கள் அரசு கட்டிடங்கள் பாலங்கள் ஆகியவற்றிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டு வருகின்றன.இதனை போடக்கூடாது.இவ்வாறு வைப்பதன் காரணமாக ஜாதி மத இன மோதல்கள் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது.
சமூக வலைதளத்தில் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை போடுவது நியாயம் கிடையாது. ஆனால் தமிழக அரசு நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். அரசுக்கு எதிராக கருத்துக்கள் போடுபவர்களை கைது செய்கிறார்கள்.
சமூக வலைதளங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். போலியான அக்கவுண்டுகள் வைத்திருப்பவர்கள் தான் பிரச்சினை. எனவே தமிழக அரசு இந்த போலியான அக்கவுண்ட்களை ஒழித்துக் கட்ட வேண்டும்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் கரூர் சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்பியதற்காக அரசு கேபிள் டிவியிலிருந்து அந்த தொலைக்காட்சியை நீக்கியது சரியல்ல. அதற்காக அரசு கேபிள் டிவியிலிருந்து விலக்குவது சரியானது கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Stop naming after Karunanidhi Dr Krishnasamy urges the Tamil Nadu government