திருமாவளவனை கைது செய்யாத பட்சத்தில்.... திருவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சனாதன தர்மத்தின் படி இந்து மதத்தில் உள்ள அனைத்து பெண்களும் விபச்சாரிகள் என்று திருமாவளவன்பேசிய வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி, இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களை சந்திக்கையில், திருமாவளவனை கைது செய்யாத பட்சத்தில், பெண்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். 

அந்த பேட்டியில், " பெண்கள் குறித்து இழிவாக மனுசாஸ்திரத்தில் கூறியிருப்பதாக திருமாவளவன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் கூறியது போல மனு சாஸ்திரத்தில் எதுவும் இல்லை. தமிழக அரசு திருமாவளவனை கைது செய்யாத பட்சத்தில், துறவிகள் மற்றும் பெண்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை தலைமையேற்று நடத்துவேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srivilliputhur Jeeyar Speech about Thirumavalavan Statement Manu Sasthra


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal