விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு முக்கிய கோரிக்கை வைத்த மாணவிகள்.!
Sports minister udhayanithi Stalin discuss with school students
தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நேற்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் இன்று அவர் சென்னையில் பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது, மாணவிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது, பள்ளி நாட்களில் பி.டி.பீரியடில் வேறு வகுப்புகள் எடுப்பதை கைவிட வேண்டும் என மாணவி ஒருவர் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலான பள்ளிகளில் பி.டி.பீரியடை விளையாட்டிற்காக பயன்படுத்தப்படாமல் மற்ற வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Sports minister udhayanithi Stalin discuss with school students