எம்.எல்.ஏ. தோட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை..தந்தை, மகன்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!
Special sub-inspector murdered in MLAs garden Police intensifies to catch the father and sons
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தந்தை, மகன்கள்வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன். இவருக்கு உடுமலை அருகே தென்னை மர தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் மூர்த்தி என்பவரின் குடும்பம் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தோட்டத்தில் பணியற்றி வந்த தந்தை , மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது . இதுபற்றி அருகில் இருந்தவர்கள், 100 க்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு ரோந்துப் பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் நேரில் விசாரித்துள்ளார். வந்துள்ளார்.
அப்போது, மதுபோதையில் இருந்த தந்தை, மகன்கள் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். ஆத்திரத்தில் எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிக் கொன்றநிலையில், மற்றொரு காவலரையும் வெட்ட முயன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் விரைந்து சென்று, சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தலைமறைவான தந்தை மூர்த்தி, மகன்கள் தங்கப்பாண்டியன் மற்றும் மணிகண்டனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே காவல்துறை ஜீப் ஓட்டுநர் அழகுராஜாவிடம் டிசிஜி சசிமோகன் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் இருவரும் தனது தோட்டத்தில் சமீபத்தில் பணிக்குச் சேர்ந்திருப்பதாகவும், அவர்கள் யாரென்றே தனக்குத் தெரியாது என்றும் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
English Summary
Special sub-inspector murdered in MLAs garden Police intensifies to catch the father and sons