ஆணவகொலையால் கணவரை இழந்த கௌசல்யாவின் இரண்டாவது திருமணம்.!அதிரடி கருத்து கூறிய பிரபல நடிகை.!
ஆணவகொலையால் கணவரை இழந்த கௌசல்யாவின் இரண்டாவது திருமணம்.!அதிரடி கருத்து கூறிய பிரபல நடிகை.!
கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலையில்,பட்டப்பகலில் சாதி மாறி திருமணம் செய்து கொண்ட சங்கர், கௌசல்யா ஜோடியை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டியது.
அதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கெளசல்யா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுக் குணமடைந்தார்.
பின்னர் கௌசல்யா, தனது கணவர் சங்கர் படுகொலைக்கு காரணமாக இருந்த தனது தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் மீது புகார் அளித்ததோடு அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர தீவிரமாக போராடி தூக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.
இதன்பிறகு, சாதியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் கௌசல்யா ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கௌசல்யா,நேற்று பறை இசை கலைஞரான சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.
இது குறித்து பேசிய நடிகையும், தொகுப்பாளியுமான சொர்ணமால்யா பேசுகையில் , கெளசல்யா மறுமணம் செய்து கொண்டது நீதிமன்றத்தில் சரியான தீர்ப்பு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சியை போல் உள்ளது .
கௌசல்யா தனக்கு நேர்ந்த மிகப்பெரிய கொடுமையை தைரியமாக எதிர்கொண்டுள்ளார். மேலும் மக்கள் ஆதரவோடு தனது வாழ்க்கையை மீட்டு புதிய வாழ்க்கையை பெற்றுள்ளார்.
அவரது இந்த மறுமணம பலருக்கு நம்பிக்கையை அளிக்கும்வகையில் உள்ளது என சொர்ணமால்யா கூறியுள்ளார்.
English Summary
sornamalya talk about gowsalya marriage