கொடைவள்ளல் கப்பல் ஓட்டிய ஆதித் தமிழர் திரு.P.M.மதுரைப்பிள்ளை அவர்கள் நினைவு தினம்!.
In memory of Thiru PM Muthuraipillai the ancient Tamil who sailed the Kodai Vallal ship
கொடைவள்ளல் கப்பல் ஓட்டிய ஆதித் தமிழர் திரு.P.M.மதுரைப்பிள்ளை அவர்கள் நினைவு தினம்!.
சென்னை மாநகரில் தொழிலதிபர் திரு. மார்க்கண்டமூர்த்தி -அம்மணியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மைந்தனாக 1858 ல் டிசம்பர் 26 ஆம் தேதி மதுரைப்பிள்ளை பிறந்தார் பிறந்தார். இன்று சென்னை வேப்பேரியிலுள்ள சென்பால்ஸ் ஐஸ்கூல்தான் அன்று எஸ்.பி.ஜி. பள்ளியாக இருந்தது. அந்தப்பள்ளியில் தான் அவரது இளமைக் கல்வி இனிதாக முடிந்தது. அதன் பின் ரங்கோனிலுள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார். தமது கல்லூரிப் படிப்பை சென்னை கிறிஸ்டியன் காலேஜில் பயின்றார்
1877-இல் சென்னை மாநில கவர்னர். பக்கிங்ஹாம் பிரபுவின் நேர்முக எழுத்தராக இருந்து பணியாற்றினார். அவரது தன்னல மறுப்பும், தளரான உழைப்பும் அவரை ரங்கோன் ஸ்ட்ராங் ஸ்டீல் என்ற அமைப்பில் பணியாற்ற வைத்தது. அவர் ஒழுக்கம் நிறைந்தவராகவும் உயர்ந்த பண்புள்ளவராகவும், நன்னடத்தை மிக்கவராகவும், நம்பிக்கையுள்ளவராகவும் சிறந்து விளங்கின தால் அவர் கப்பல் துபாஷ் ஸ்டீவ்டென் என்கிற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை சொந்தத்தில் ஆரம்பித்து திறமையாகவும் நடத்தினார்.
கல்வி அறிவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிக அவசியமானது அவசரமானது என்பதை உணர்ந்து அவர் ஒரு உயர்நிலைப் பள்ளியை கட்டினார். தாழ்த்தப்பட்டோரின் கல்விக் கண்ணைத் திறந்து அவர்களைப் படிக்க ஊக்கமூட்டினார்.
எண்ணற்ற ஏழைகள் பழங்குடி தாழ்த்தப்பட்ட மக்கள் திருமணங்களை அவரே செலவு செய்து முடித்து வைத்திருக்கி றார். இது ஒன்றே அவரது நோக்கை பறை சாற்றும். எனவேதான் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் சக்ராதிபதியாத இருந்த ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்திக்கு 1906-இல் அவர் அறிமுகம் செய்விக்கப்பட்டார். சக்கரவர்த்தி பெருமிதத்தோடு சிறந்த பொதுத்தொண்டர் என்று பாராட்டினார்.
1912 இல் ஒரு புதிய கப்பலை வாங்கினார் மீனாட்சி என்று தனது மகளின் பெயரை சூட்டினார். 1913 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி கொடை வள்ளல் பெ.மா.மதுரைப்பிள்ளை அவர்கள் காலமானார். அவரது மரணத்தை அறிந்த ரங்கூன் அரசு விடுமுறை அறிவித்தது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
English Summary
In memory of Thiru PM Muthuraipillai the ancient Tamil who sailed the Kodai Vallal ship