அபாயம் கண்டு துரிதமாக செயல்பட்ட ரெயில் என்ஜின் டிரைவர்! அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் suspend...! - Seithipunal
Seithipunal


வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலானது, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக நாகர்கோவில்-காச்சிகுடா இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் நாகர்கோவிலிலிருந்து காச்சிகுடாவுக்கு சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை இடையே தண்டரை கிராமத்திற்கு அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அங்கிருந்த ரெயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக, நடுவழியிலேயே எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்திவிட்டு, என்ஜின் டிரைவர் கீழே இறங்கி வந்தார்.

அதன் பிறகு, ரெயில்வே கேட் மூடாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும், கேட் கீப்பரின் அலட்சியத்தால் கேட் மூடாதது தெரியவந்தது.பிறகு,அவர் ரெயில்வே கேட்டை மூடிவிட்டு சென்றார். இதனால் சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து, எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி தெற்கு ரெயில்வே கோட்ட உயர் அலுவலர்களுக்கு புகார் அளித்தார். அதன் பேரில், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.மேலும், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் ராமு என்பவரை தெற்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்டு செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி கேட்டை மூடாமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஏற்கனவே ரெயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

train engine driver acted quickly after seeing danger negligent gatekeeper was suspended


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->