No use! கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக பாஜக அரசு என்ன செய்தது? - முதலமைச்சர் கேள்வி
What did BJP government do last 10 years to restore Katchatheevu Chief Ministers question
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்தார்.மேலும், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,"கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காது இன்றும் அரசியல் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை.
கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார்கள். கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு ஒன்றுமே செய்யவில்லை.
கச்சத்தீவை தாரைவார்ப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்று என்று அனைவரும் அறிவர். கச்சத்தீவு பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
What did BJP government do last 10 years to restore Katchatheevu Chief Ministers question