விதியை மீறினால் வீதியில் பறக்கும் பழங்கள்.. காவல்துறை கறார்?..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மாவட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

காலை 10 மணிவரை அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யவும், வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலின் உச்சகட்ட பாதிப்பு காரணமாக காவல் துறையினர் மூலமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோவில், விதியை மீறி வைக்கப்பட்டு இருந்த பழக்கடையை மூடக்கூறிய காவல்துறை அதிகாரிகள், கடையில் இருந்த பழங்களை அள்ளி வெளியே வீசியதாக தெரியவருகிறது. 

இது குறித்த வீடியோ காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விதியை மீறினால் இப்படித்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?. அபராதம் விதியுங்கள் அல்லது பறிமுதல் செய்த பழங்களை இல்லாதோரிடும், பசியோடு இருக்கும் நபர்களை வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social Media Video Trend about Police Officers Through Fruits Road Offence Lockdown


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->