பந்தயம் கட்டி 19 பீர்கள் குடித்த ஐ.டி. பொறியாளர்கள் இருவர் உயிரிழப்பு..!
Two IT engineers die after drinking 19 beers in a bet
ஆந்திராவில் பந்தயம் கட்டி, தலா 19 பீர்கள் குடித்து ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் சங்கராந்தி பண்டிகை அன்று நண்பர்கள் ஆறுபேர் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில், மணிகுமார் (34) மற்றும் புஷ்பராஜ் (26) இருவரும் போட்டியிட்டு மதியம் 03 மணி முதல் இரவு 07.30 மணி வரை 19 பீர் குதித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது.
உடனே அவர்களது நண்பர்கள், இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிக்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து புஷ்பராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார். பந்தவடிப்பள்ளியைச் சேர்ந்த மணிகுமார் சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால், புஷ்பராஜுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். அவர்களின் இறப்புக்கு காரணம், அதிகப்படியான மது அருந்தியதே காரணமா என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே இரண்டு மென்பொருள் பொறியாளர்களும் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக YSRCP கட்சி குற்றம் சாட்டிய நிலையில்,மதுவில் எந்த குறைபாடும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக கலால் கண்காணிப்பாளர் மதுசூதன் தெரிவித்துள்ளார்.
English Summary
Two IT engineers die after drinking 19 beers in a bet