அப்படி என்ன அவசரம்.....ரயில் நிற்பதற்கு முன்பு இறங்க முயன்ற நபரின் நிலை? - Seithipunal
Seithipunal


திருச்சியில் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே முன்னாள் ரயில்வே ஊழியர் இறங்க முயன்ற  நிலையில், அவர் தடுமாறி கீழே விழுந்து ரெயிலுக்கு இடையே சிக்கிக் கொண்டார்.

திருச்சி சந்திப்பு ரெயில் நிலைய நடைமேடையில் பல்லவன் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் நிற்பதற்கு முன்பாகவே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான ஜெயச்சந்திரன் என்பவர் இறங்கியுள்ளார். இதில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அவர் சிக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இதனைக்கண்ட ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட ரெயில்வே ஊழியர், தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ கானொலி வெளியாகியுள்ள நிலையில், அதுக்குள்ளே அவசரமா, நல்வாய்ப்பாக உயிர் தப்பித்தார், ஒரு உயிர் பாதுகாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

So whats the rush the condition of the person who tried to get off the train before it stopped


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->