சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்களின் சேவை ரத்து.!!
six flight service cancelled in chennai
சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்களின் சேவை ரத்து.!!
சென்னையில் உள்ள மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விமானநிலையத்தில் இன்று காலை முதல் பயணிகளின் எண்ணிக்கை வரத்து குறைவாக இருப்பதால், மொத்தம் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் விமானம், மாலை 3.40 மணிக்கு சென்னையில் இருந்து சீரடி செல்லும் தனியார் விமானம், சென்னையில் இருந்து மாலை 4.05 மணிக்கு செல்லும்.
அதேபோல் திருவனந்தபுரத்திலிருந்து காலை 8.35 மணிக்கு சென்னை வரவேண்டிய பயணிகள் விமானம், மாலை 3.05 மணிக்கு கொழும்பில் இருந்து சென்னை வரும் பயணிகள் விமானம், மாலை 6.45 மணிக்கு சீரடியில் இருந்து, சென்னை வரும் தனியார் விமானம் என்று மொத்தம் ஆறு விமானங்களின் சேவைகள் பயணிகளின் எண்ணிக்கை குறைவினால் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து விட்டதால், விமானப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது மட்டுமல்லாமல், மேற்கூறியுள்ள விமானங்களில் பயணம் செய்வதற்கு மிகக் குறைந்த பயணிகளே முன்பதிவும் செய்துள்ளனர். இதனால் போதிய பயணிகள் இல்லாமல், சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் ஆறு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனால், இந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, முன்னதாகவே தகவல் தெரிவித்து மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் நான்கு உள்நாட்டு விமானங்களும், சர்வதேச விமான சேவையில் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவித்தனர்.
English Summary
six flight service cancelled in chennai