2 வருடமாக வெளிநாட்டில் இருந்த கணவன்.! அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த மனைவி - குழப்பத்தில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


சமயநல்லூர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு ஒன்றை அளித்தார். அவரின் அந்த புகார் மனுவில், 'நான் உயிரோடு இருக்கும்போதே, இறந்து விட்டதாக என் கணவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து இருக்கிறார்' என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, புகார் அளித்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், "மூன்று வருடங்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும், அழகாபுரியை சேர்ந்த மோனிஷா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து இரு மாதத்தில் பாலகிருஷ்ணன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மோனிஷா கர்ப்பம் தரித்து ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு பிறகு ஊர் திரும்பிய பாலகிருஷ்ணன், அந்த குழந்தை தனக்கு பிறந்ததில்லை என்று தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. 

குழந்தையை பார்த்த பிறகு பாலகிருஷ்ணனுக்கு அந்த சந்தேகம் மேலும் உறுதியாகியுள்ளது. இதைதொடர்ந்து குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கவே, பாலகிருஷ்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசிய அப்போது அப்போது இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசிய போலீசார் சமரசம் செய்து ஒன்றாக வாழும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், பாலகிருஷ்ணன் தனது சொந்த ஊரிலேயே ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். ஆனால், முதல் மனைவிக்கு என்ன ஆச்சு என்று பாலகிருஷ்ணன் உறவினர்கள் கேள்வி எழுப்பவே, அவர்களின் வாயை அடைப்பதற்காக மோனிஷா இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து  ஊர்முழுக்க ஒட்டி உள்ளார்.

போஸ்டர் விவகாரம் மற்றும் திருமணம் விவரத்தை அறிந்த மோனிஷா மற்றும் அவரின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளிக்க வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், எப்படி இந்த வழக்கில் தீர்வு காண்பது என்பது என்று குழப்பமடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sivhangai some marriage case issue


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->