சென்னை : உடன் பிறந்த சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் 48 வயதான சகோதரியை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சொந்த சகோதரனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை அருகே 40 வயது உடைய பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்தப் பெண்ணின் தம்பியான அண்ணாமலை என்பவர் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து கூடப்பிறந்த சகோதரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

தினமும் மது அருந்திவிட்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.  ஒருகட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட அந்த பெண், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அண்ணாமலையை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இதேபோல் சென்னையின் மற்றொரு பகுதியில், சிறுமியை காதலிப்பதாக கூறி இரண்டு வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வகுப்பு படித்துவரும் அந்த சிறுமிக்கு, இளைஞர்கள் இருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sister abused to brother in chennai


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal