சிவகங்கையில் பரபரப்பு.. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட எஸ்.ஐ காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைகிராமம் பேருந்து நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு அரசு மதுபான கடையில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்வது குறித்து செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 25க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான் பிரிட்டோ என்பவர் இந்த மது விற்பனையில் தொடர்பு இருப்பதாக கூறி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவிட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர் பிரிட்டோ காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதனை கண்ட சக காவலர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள உதவியாளர் ஜான் பிரிட்டோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SI suicide attempt in police station for transferred to armed forces


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->