திருப்பூர் பள்ளியில் அதிர்ச்சி! மாணவர் பையில் கால் கிலோ கஞ்சா…! காவலர்களுக்கு பதில் ஆசிரியர் தீ வாய்ப்பு...! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம், கல்வி வளாகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டிய பள்ளி வளாகத்திலேயே போதைப் பொருள் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவர் சகாயமேரி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் நேரில் மனு அளித்து இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

அவர் அளித்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, பிளஸ்-2 மாணவர் ஒருவரின் புத்தகப்பையை வகுப்பு ஆசிரியர் சோதனை செய்தபோது சுமார் கால் கிலோ கஞ்சா, சிகரெட்டுகள் மற்றும் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கப்பட்டது.இந்த  சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கு  புகார் அளித்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு பதிலாக பொறுப்பு தலைமை ஆசிரியர் அந்த கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீ வைத்து எரித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் சான்றுகள் அழிக்கப்பட்டதாகவும், இதுவரை உரிய விசாரணை நடைபெறாததாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “மாணவரிடம் போதைப் பொருள் எப்படி வந்தது? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? முழுமையான விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த மாணவர் சமுதாயத்தை பாதுகாக்க நடவடிக்கை அவசியம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த தகவல் வெளிவந்ததும் திருப்பூர் முழுவதும் அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஆரம்ப கட்ட விசாரணையில், அந்த மாணவர் தனது அண்ணனுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதாகவும், அவர் தான் அதை புத்தகப்பையில் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking news Tiruppur school quarter kilo ganja student bag Teacher fires kanja instead police


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->