அதிர்ச்சி சம்பவம்...! தடையை மீறி அருவியில் குளித்த இளைஞர்கள்...! - சுழலில் சிக்கி 4 பேர் பலி...!
Shocking incident Youths defied ban and took bath waterfall 4 people died after getting caught whirlpool
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி பகுதியில் அமைந்துள்ள மேல் தலையூற்று அருவி, இயற்கை அழகால் ஈர்த்தாலும் ஆபத்துகளால் பெயர் பெற்ற இடமாகவும் உள்ளது. பரப்பலாறு அணையிலிருந்து வெளியேறும் நீர் இங்கு அருவியாக பாய்கிறது.
ஆனால், அருவி சுற்றுவட்டாரத்தில் சுழல்கள் மற்றும் புதைகுழிகள் இருப்பதால், பல உயிரிழப்புகள் நிகழ்ந்ததையடுத்து அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், கோடைக்காலத்திலும் நீர் தொடர்ந்து வரும் காரணத்தால், பலர் இந்தத் தடையை மீறி குளிக்கச் செல்லும் நிலை தொடர்கிறது.இந்த நிலையில், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 11 நண்பர்கள் நேற்று மாலை வனப்பகுதியை நோக்கி பயணித்துள்ளனர்.
அதில் ஆதில், சதாம் உசேன், ஆயாஸ், பயாஸ் ஆகிய 4 இளைஞர்கள் அருவியில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக நீரில் சிக்கி மூழ்கினர்.இந்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மற்றொரு இளைஞரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், அருவிக்குச் செல்லும் முன் இளைஞர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தடை விதிக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking incident Youths defied ban and took bath waterfall 4 people died after getting caught whirlpool