பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பேரதிர்ச்சி...! அரசு பணி உத்தரவை அடியோடு ரத்து செய்து அதிரடி முடிவு...! - Seithipunal
Seithipunal


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையே, சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவுகளை முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என். பிரபாகரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசியல் கூட்டங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து எந்த விதிமுறையும் குறிப்பிடப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையின் போக்கில் தலையிடும் நடவடிக்கையாக அமையக்கூடும் என்றும், சாட்சியங்களை மாற்றிக் கூறுவதற்கு அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை முடிவில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock affected families Government takes drastic decision cancel work order


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->