ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆந்திர வாலிபருக்கு தர்ம அடி!
Sexual harassment of a girl on a moving train Dharma slap for the Andhra youth
ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது 9 வயது மகளுடன் மீண்டும் சொந்த ஊருக்கு திருப்பினர்.அப்போது நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அந்த குடும்பத்தினர் பயணம் செய்தனர்.
அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் குமார் மது போதையில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.உடனே சிறுமி கத்தி கூச்சலிட அந்த வாலிபர் அங்கிருந்து வேறு பெட்டிக்கு சென்று விட்டார்.
மேலும் இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது பாலியல் தொந்தரவு செய்ததாக கூறினார். இதனையடுத்து வேறு பெட்டியில் இருந்த அந்த வாலிபரை தேடிபிடித்து தர்ம அடி கொடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வந்ததும் அவர்களிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
English Summary
Sexual harassment of a girl on a moving train Dharma slap for the Andhra youth