மாணவனிடம் பாலியல் அத்துமீறல்.. 3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள  அரசு உதவிபெறும் பள்ளி பிளஸ்-1 மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுத்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலில் குற்றங்களும் நாளுக்கு நாள் அது அதிகரித்துவருகிறது.

 சமீப காலமாக பள்ளி மாணவிகள் முதல்  பெரிய பெண்கள் வரை அவர்களுக்கு பாலில் தொல்லையானது அளிக்கப்பட்டு வருகிறது ,சட்டங்கள் கடுமையான தண்டனை வழங்கினாலும் ,ஒரு சில இடங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இன்றளவும்  நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்தநிலையில் அரசு உதவிபெறும் பள்ளி பிளஸ்-1 மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும்  அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 வரை வகுப்புகள் நடந்து வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கு, அங்கு பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் சேர்ந்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பிளஸ்-1 மாணவன் பெற்றோருடன் , இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 3 மாணவர்களில் 2 பேரை கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sexual assault on a studentPOCSO case against 3 students


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->