பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டவில்லை என்றால் கடும் நடவடிக்கை.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் பாஸ்டேக் ஸ்டிக்கரை கட்டாயமாக ஒட்ட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது.

பாஸ்டேக் ஸ்டிக்கரை கைவசம் வைத்திருப்பது விதிமீறல் என்றும், இவ்வாறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் நெரிசலை குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் 'பாஸ்டேக்' முறை நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ளது. இந்த மின்னணு முறையின் மூலம், சுங்க கட்டணம் வாகன உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், சில வாகன உரிமையாளர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கரை முன்பக்க கண்ணாடியில் ஒட்டாமல், வாகனத்தில் தனியாக வைத்திருப்பது வழக்கமாகியுள்ளது. இதை சுங்க கட்டணம் தவிர்ப்பதற்கான வழியாக சிலர் பயன்படுத்துவதால், கட்டண வசூலியில் குழப்பம் ஏற்படுகிறது.

சுங்கச்சாவடி பணியாளர்களிடம் சிக்கும்போது, கைவசம் வைத்திருக்கும் ஸ்டிக்கரை காண்பித்து கட்டணம் செலுத்தும் நடவடிக்கையும் நடைபெறுகிறது. இதனை தடுக்க, பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனங்களை 'கருப்பு பட்டியல்' (Blacklist) இட வேண்டிய உத்தரவை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதற்காக, சுங்கச்சாவடிகளில் இருந்து புகார்களை பெற பிரத்யேக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த முகவரிக்கு நிர்வாகம் புகார்களை அனுப்ப, பின்வட்டார நடவடிக்கையாக அந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் நிரந்தரமாக முடக்கப்படும்.

மேலும், பாஸ்டேக் ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டுவதற்கான கட்டாய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் தடையற்ற மற்றும் விரைவான போக்குவரத்து நடப்பதற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Severe action will be taken if the paste stick is not applied National Highways Authority warns


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->