சேலம் : பூட்டிய பட்டறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உடல் - போலீசார் விசாரணை.!!
seven years old boy body recovered car in salem
சேலம் : பூட்டிய பட்டறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உடல் - போலீசார் விசாரணை.!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை பகுதி அருகே ராமநாதபுரம் ரஷ்யா காலனியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர், அதே பகுதியில் கார் பழுது பார்க்கும் மற்றும் பெயிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், மாணிக்கம் தனது தங்கைக்கு திருமணம் என்பதால் கடந்த 22-ஆம் தேதி முதல் பட்டறையை மூடிவிட்டுச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, மாணிக்கம் நேற்று இரவு தனது கார் பட்டறைக்கு வந்து வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, பட்டறையில் பழுது நீக்குவதற்காக கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் மாணிக்கம் அந்த காரை திறந்து பார்த்தபோது, காரின் உள்ளே சிறுவன் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காருக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் அந்த சிறுவன் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? அவரது பெற்றோர் யார்? என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், போலீசார் அம்மாப்பேட்டை, வீராணம், கிச்சிப்பாளையம், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் ஏழு வயது சிறுவன் யாரவது காணாமல் போய் உள்ளார்களா? என்றும், காணாமல் போன சிறுவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
seven years old boy body recovered car in salem