"கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறை!": சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் - அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
SETC Announces Hundreds of Special Buses for Krishna Jayanthi and Extended Weekend
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிப் பயணம் செய்யத் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் விரிவான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிளம்பாக்கம் முனையம் (KCBT): திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர்.
செப்டம்பர் 3 (வியாழக்கிழமை): 910 பேருந்துகள்.
செப்டம்பர் 4 (வெள்ளிக்கிழமை): 740 பேருந்துகள்.
செப்டம்பர் 5 (சனிக்கிழமை): 880 பேருந்துகள்.
கோயம்பேடு முனையம் (CMBT): திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு.
செப்டம்பர் 3: 210 பேருந்துகள்.
செப்டம்பர் 4 & 5: தலா 115 பேருந்துகள்.
பிற நகரங்கள்: பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் முனையம்:
செப்டம்பர் 3 முதல் 5 வரை: கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்குத் தினமும் தலா 95 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
திரும்பும் பயணிகளுக்கான ஏற்பாடுகள்
தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குத் திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து முக்கிய இடங்களில் இருந்தும் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
SETC Announces Hundreds of Special Buses for Krishna Jayanthi and Extended Weekend