கோவை டிஐஜி தற்கொலைக்கு காரணம் என்ன.? வெளியான பரபரப்பு தகவல்.!!
Sensational info about DIG Vijayakumar suicide
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஐபிஎஸ் கோவை சரக்க டிஐஜியாக பணியாற்றி வரும் நிலையில் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை 6 மணிக்கு நடை பயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர் மெய் காப்பாளர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடைய மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்று இரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட டிஐஜி விஜயகுமார் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
டிஐஜி விஜயகுமார் கடந்த 2 ஆண்டுகளாக தூக்கமின்மையால் மாத்திரை பயன்படுத்தி வந்துள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சொந்த பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம், பணியில் ஏற்பட்ட மன அழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொள்ளாமல் இன்று காலை அவருடைய அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்தாலும் கடந்த 6 மாத காலமாக கோவையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
விஜயகுமாரின் தற்கொலையை காவல்துறையினரால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை என சக காவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தற்பொழுது கோவை மாவட்டத்திற்கு விரைந்துள்ளார். டிஐஜி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sensational info about DIG Vijayakumar suicide