அத்துமீறும் திமுக கூட்டணி கட்சிகள்! தேர்தல் அதிகாரியிடம் செங்கோட்டையன் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "ஈரோட்டில் பல இடங்களில் அனுமதி பெறாமலேயே திமுக கூட்டணிக் கட்சிகள் கூடாரங்கள் அமைத்து உள்ளனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியின் செயல்களை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதேபோல்,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற வாக்காளர் பட்டியலில் இருக்கின்ற முறைகேடுகளை, மோசடிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. புகாராக அளித்தார்.

பின்னர் செய்தியர்களை சந்தித்து அவர், "ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 239 வாக்குச்சாவடிகளிலும், 40 ஆயிரம் போலி வாக்காளர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து நாங்கள் சேகரித்த ஆதாரத்தை தற்போது ஒப்படைத்துள்ளோம்.

எங்கள் ஆய்வின்படி, மொத்த வாக்காளர்கள் 2212876 பேரில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அவர்களின் முகவரியில் இல்லாதவர்களின் மொத்தம் 30 ஆயிரம் பேர், வாக்காளர் இறந்துவிட்டார், ஆனால் அவர் பெயர் நீக்கப்படாமல் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9947 பேர்.

அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் இடம் பெற்றுள்ள நபர்களின் எண்ணிக்கை 1009 பேர். இப்படி மொத்தமாக  40,000 வாக்குகள் இன்றைக்கு வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இது மொத்த வாக்காளர்களில் 20 சதவீதம் ஆகும்" என்று சிவி சண்முகம் தெரிவித்து இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senkottaiyan report to election officer


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->