விஜய் மீது சர்ச்சை விமர்சனம்: ‘யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை’...! - நயினார் நாகேந்திரன் விளக்கம் - Seithipunal
Seithipunal


த.வெ.க தலைவர் விஜயை குறித்த தனது கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நயினார் நாகேந்திரன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான பந்தல்கால் நடப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர், “யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு ஒருபோதும் இல்லை. யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதே என் எண்ணம்” என்று முதலில் தெளிவுபடுத்தினார்.

மேலும், “பிளவு ஏற்பட்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில்தான்; எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.

தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி கொடுத்து திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார். அது அவர்களது பலவீனத்தை காட்டுகிறது” என விமர்சித்தார்.

அதோடு, “எங்கள் அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையால் பாரதீய ஜனதா கட்சி இன்னும் வலுவாக உள்ளது. அவரின் தலைமையில் நல்லாட்சி மலரும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இறுதியாக, “விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு தெளிவான கொள்கை இருக்கிறதா? இருந்தால் அதை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversial criticism against Vijay No intention offend anyone Nainar Nagendran explains


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->