நான் யாரையும் சந்திக்கவில்லை - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செங்கோட்டையன்.!!
sengottaiyan say no meet anyone in chennai
சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் நேற்று சென்னைக்கு சென்றிருந்தார். அங்கு அவர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், செங்கோட்டையன் சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதாவது:- "சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் எனது மனைவியை சந்திக்க சென்றிருந்தேன்.

அங்கு எனது சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீட்டிற்கு திரும்பியிருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை. நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரையும் சந்திக்கவில்லை என்றுத் தெரிவித்தார்.
English Summary
sengottaiyan say no meet anyone in chennai