மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Self Help Groups ID Card TamilNadu Govt
தமிழகத்தில் உள்ள 60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணியை 9 மாதங்களில் முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக அரசு உருவாக்கிய குழுக்களில் உள்ள பெண்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். அதன் பின், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமைத்த குழுக்களில் உள்ள உறுப்பினர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டையைப் பெற்ற பெண்களுக்கு பல நலன்கள் உண்டு. மாநில போக்குவரத்துக் கழகத்தினுடைய சாதாரண பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்பு பொருட்களை கட்டணமின்றி எடுத்துசெல்ல அனுமதி கிடைக்கும் (AC பேருந்துகள் தவிர).
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணி வாங்கும்போது 5% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் வழங்கப்படும் கடனுதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
அதேபோல், ஆவின் நிறுவனப் பொருட்களை சலுகை விலையில் வாங்கும் வாய்ப்பு மற்றும் இணைய சேவை மையங்களில் 10% தள்ளுபடி பெறும் வசதி அடையாள அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு கிடைக்கும்.
English Summary
Self Help Groups ID Card TamilNadu Govt