ஸ்கூட்டி மீது மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து.. பெண் ஒருவர் பலி.!
Scotty and motor bike accident in kanniyakumari women death
ஸ்கூட்டி மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுஉள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் வெள்ளச்சிவிளை பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவரது மனைவி ஷைலஜா (வயது 42) நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டியில் வில்லுக்குறி சென்றுவிட்டு வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஷைலஜா வெள்ளச்சிவிளையை சென்றடைந்தபோது எதிரே மோட்டார் பைக் ஒன்று வந்தது. அந்த மோட்டார் பைக்கில் தக்கலை பகுதியில் வசித்துவரும் செல்சோ என்பவர் ஓட்டிவந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்கூட்டர் மீது மோட்டார் பைக் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஸ்கூட்டரிலிருந்து ஷைலஜா தூக்கிவீசப்பட்டார். இந்த கொடூர விபத்தில் ஷைலஜாவுடைய தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் ஷைலஜா மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக புகாரின்பேரில் மோட்டார் பைக்கை ஓட்டிவந்த செல்சோ மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Scotty and motor bike accident in kanniyakumari women death