மணிப்பூரில் அதிரடி சோதனை: போராட்ட குழுவினரிடம் இருந்து 203 ஆயுதங்கள் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நடந்து வருகின்றது. இதன்காரணமாக அம்மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது ஆயுதம் ஏந்திய கும்பலை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அங்குள்ள நகரங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைகள் மூலம் சுமார் 203-க்கும் மேற்பட்ட ஆயுதங்ககளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், நாட்டு துப்பாக்கிகள், ரைபிள்கள் உள்பட பல நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த ஆயுதங்களை போராட்ட குழுவினர் போலீசாருக்கு எதிராக பயன்படுத்தி வந்துள்ளதாகவும், இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இதன் மூலம் வன்முறை சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police and security forces seize 203 weapons in raids in Manipur


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->