கோவையில் பரபரப்பு - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியை கைது.!
school teacher arrested for harassment case in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில் ஆசிரியை சவுந்தர்யா அந்த மாணவியை வெளியே அழைத்து சென்று அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் படி போலீசார் ஆசிரியை சவுந்தர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பள்ளி மாணவிக்கு ஆசிரியை பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
school teacher arrested for harassment case in coimbatore