சுட்டெரிக்கும் கோடை வெயில்.. "சூரியா" குடும்பம்" தான் முக்கியம்..பள்ளி மாணவர்கள் அவதி..!! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யாவின் வருகைக்காக கொளுத்தும் கோடை வெயிலில் நிற்க வைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசால் கீழடி அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மார்ச் 5ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினால் திறக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 70 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் சிவக்குமார் இன்று பார்வையிட்டனர். சூர்யா, ஜோதிகா, சிவக்குமாருக்கு கீழடி அருங்காட்சியகம் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விளக்கம் அளித்தார்.

சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் வருகையால் கீழடி அருங்காட்சியகத்திற்குள் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், செய்தியாளர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று காலை 10 மணியிலிருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை அனுமதித்திருக்க வேண்டும்.

ஆனால் நடிகர் சூர்யாவின் குடும்பம் 9.30 மணியிலிருந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வந்ததால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோடை வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டு சென்ற பின்னர் பொதுமக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்டபள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யாவின் குடும்பத்திற்காக கீழடி அருங்காட்சியகத்திற்குள் பள்ளி மாணவர்களை அனுமதிக்காமல் சுட்டெரிக்கும் வெயிலில் அருங்காட்சியகத்திற்கு வெளியே காக்கவைப்பட்ட சம்பவம் கண்டினத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  பள்ளி மாணவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்பதை விட சூர்யாவின் குடும்பத்தினர் வருகை தான் முக்கியமா.? என என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School students suffered at keezadi museum due to actor suriya visit


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->