#திருவண்ணாமலை : பள்ளி கட்டிடம் இல்லாமல், சந்துபொந்துகளில் உட்கார்ந்து படிக்கும் மாணவர்கள்.!
School students class temple in Thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதிக்கு அருகில் அண்டபேட்டையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கின்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கட்டிடம் இல்லாத காரணத்தால் கோவிலில் உள்ள இடுக்குகளில் அமர்ந்து படிக்கின்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் 20 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த கல்வியாண்டிற்கு முன்பே அரசு பள்ளியின் கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கு கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளின் காரணமாக மாணவ மாணவிகளை அங்கு இருக்கும் தனிநபர் வீட்டில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்துள்ளனர்.
இப்போது, கோடை விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் பள்ளி துவங்கிய நிலையில் இன்னும் கட்டிட வேலை முடியவில்லை. எனவே, மாணவர்களை மரத்தடி மற்றும் கோயிலில் அமைந்துள்ள இடுக்குகள் உள்ளிட்டவற்றில் அமர வைத்து ஆசிரியர் பாடம் நடத்தி வருகின்றார்.

நீண்ட நாட்களாக பள்ளி கட்டிட வேலை நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இன்னும் பள்ளி கட்டிடத்தின் வேலை பூர்த்தியாகவில்லை என்று மாணவர்களின் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியரை சந்தித்து பள்ளி கட்டிட வேலை முடியும் வரை தற்காலிக கட்டிடம் எதையாவது ஏற்பாடு செய்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
School students class temple in Thiruvannamalai