#தமிழகம் || பேருந்தில் கூட்டநெரிசல், படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் இடறி விழுந்து படுகாயம்.!
school student traveling Bus stairs stumbled and injured
வேலூர், பாகாயம் முல்லை நகரை சேர்ந்த மாணவர் ஒருவர் (வயது15) சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
இன்று காலை பாகாயத்திலிருந்து பள்ளிக்கு பேருந்தில் வந்தார். பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கிய படி மாணவன் பயணம் செய்தார்.

பேருந்து விருப்பாட்சிபுரம் அருகே வந்தபோது திடீரென ஓட்டுநர் பிரேக் போட்டார். அப்போது படிக்கட்டிலிருந்து மாணவன் தவறி கீழே விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தலையில் காயம் ஏற்பட்டது.
பேருந்தில் பயணித்த பயணிகள் மாணவனை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
school student traveling Bus stairs stumbled and injured