நட்சத்திர பட்டாளம் நிறைந்த ‘டாக்ஸிக்’…! பிரபல young bollywood நடிகையின் பர்ஸ்ட் லுக் வெளியீடு...!
Toxic featuring star studded cast first look popular young Bollywood actress released
நடிகர் யாஷ் தனது நடிப்பு பயணத்தின் 19-வது திரைப்படத்தில் தற்போது முழுவீச்சில் நடித்து வருகிறார். இந்த பிரமாண்ட படத்திற்கு ‘டாக்ஸிக்’ (Toxic) என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகையும், இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம், அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இப்படத்திலிருந்து நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது பிரபல நடிகையும் பாடகியுமான தாரா சுதாரியாவின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில், நடிகை தாரா சுதாரியா ‘ரெபேக்கா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வைரலாகி வருகிறது.
English Summary
Toxic featuring star studded cast first look popular young Bollywood actress released