போராட்டம் முடிவுக்கு வந்தது… அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்! - ஜாக்டோ ஜியோ - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் மூத்த உயரதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு வழங்கும் வகையில் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள், அவருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர். நீண்ட காலமாக தொடர்ந்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,"50 சதவீத உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை அறிவித்த முதலமைச்சருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

ஊழியர்கள் எதிர்பார்த்தபடியே அறிவிப்பு வெளியாகியுள்ளது. 48 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையிலான ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முழுமையாக வரவேற்கிறது.

மேலும், 23 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த போராட்டத்திற்கு இன்று நிரந்தர முடிவு கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வரும் 6-ம் தேதி முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

protest come end Government employees withdraw strike notice JACTO GEO


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->