நாமக்கல் : பெற்றோர் திட்டியதால் தேர்வு முடிவுக்காக காத்திருந்த பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை.!
school student sucide in namakkal
நாமக்கல் : பெற்றோர் திட்டியதால் தேர்வு முடிவுக்காக காத்திருந்த பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியை சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன்-அன்புச்செல்வி தம்பதியினர். இவர்கள் மகன் விக்னேஸ்வரன். நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் பொதுத்தேர்வின் முடிவுக்காக காத்திருந்தார்.

இதற்கிடையே விக்னேஸ்வரன் ஒழுங்காக படிக்கவில்லை என்றும், பொதுத்தேர்வையும் ஒழுங்காக எழுதவில்லை என்றும் அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த விக்னேஸ்வரன் பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் விக்னேஸ்வரன் நேற்று காலை திடீரென காணாமல் போயுள்ளார். இதையறிந்த அவரது பாட்டி பல இடங்களில் விக்னேஸ்வரனைத் தேடியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன் பாட்டி வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது, விக்னேஸ்வரன் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிஎப்படி இருந்துள்ளார்.

இதைக்கண்டு கதறி அழுத பாட்டியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோ திட்டையால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student sucide in namakkal