மதுபானக் கடையை அகற்றுங்கள் - முதலமைச்சருக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுக்கும் பள்ளி மாணவி.! - Seithipunal
Seithipunal


மதுபானக் கடையை அகற்றுங்கள் - முதலமைச்சருக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுக்கும் பள்ளி மாணவி.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருச்சி - ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு அருகே தனியார் மதுபான கடை மற்றும் பார் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த பார் குடியிருப்பு மற்றும் பள்ளி செல்லும் வழியில் அமைய உள்ளதால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் அரசு இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் களங்காபுளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஸ்ரீவித்யா வீடியோ மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

அந்த வீடியோவில், ‘’நாங்கள் வீட்டிலிருந்து பள்ளி செல்லும் வழியில் மதுபானக் கடை பார் அமைக்கிறார்கள். இந்த மதுபான பாரால் நாங்கள் பள்ளிக்கு செல்வது பாதிக்கப்படும். ஆகவே மதுபானக் கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். 

பள்ளி மாணவி ஒருவர் மதுபானக் கடையை அகற்ற சொல்லுமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student request vedio to cm stalin for remove tasmac


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->