சேலம் || மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன்.! பிணமாக மிதந்த சம்பவம்.!
school student died in salem edappadi
சேலம் || மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன்.! பிணமாக மிதந்த சம்பவம்.!
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் நந்தீஸ்வரன். அதே பகுதியிலுள்ள பள்ளியில் படித்து வந்த இவர் கடந்த 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தந்தையுடன் ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அங்கு இருவரும் வெவ்வேறு இடத்தில் மீன் பிடித்துள்ளனர். இதையடுத்து தந்தை கோவிந்தன் மீன்பிடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் மகன் நந்தீஸ்வரன் வீட்டிற்கு வரவில்லை.
இதனால், பதற்றமடைந்த கோவிந்தன் எரிக்குச் சென்று பல இடங்களில் மகனைத் தேடி வந்தனர். ஆனால், நந்தீஸ்வரன் கிடைக்காததால், தந்தை கோவிந்தன் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
அதன் படி போலீசார் பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலை நந்தீஸ்வரன் மீன்பிடித்த அதே பகுதியில் சடலமாக மிதந்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி விரைந்து வந்த போலீஸார், ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student died in salem edappadi