மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: பள்ளி முதல்வர் உள்பட 5 பேர் கைது!
School principal 5 arrested for stripping students naked
தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய கொடூரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் ஆர்.எஸ். தமானி பள்ளி வளாகத்திலுள்ள கழிப்பறையில் ரத்தக்கறை காணப்பட்டதைத் தொடர்ந்து, அதைச் செய்த மாணவியை கண்டறிய பள்ளி நிர்வாகம் முறையற்ற, மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மாதவிடாய் இருப்பதாகக் கூறிய மாணவிகளின் இடது கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டதுடன், மற்ற மாணவிகள் கழிப்பறைக்கு அழைத்து செல்லப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறியதும், பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்துடன் பெற்றோர் பதற்றமடைந்து, பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டம், மானபங்கம், மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட், பெண் ஊழியர் நந்தா, மற்றும் மற்ற மூன்று ஊழியர்கள் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் உத்தரவின் பேரிலேயே இந்த செயல் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பல்வேறு குழந்தை உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் மீதான இந்த மானம்கெடுக்கும் நடவடிக்கைக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூகத்தில் வலியுறுத்தல் அதிகரித்து வருகிறது.
English Summary
School principal 5 arrested for stripping students naked