அனைவரும் தமிழிலே கையொப்பமிட வேண்டும்.!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறையில் பணி புரியும் அனைவரும் தமிழிலே கையொப்பமிட வேண்டும் எனவும், ஆவணங்கள், வருகைப்பதிவு மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் "அரசாணை எண்:140 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை நாள் 02.11 2021 அரசாணை மற்றும் அரசு கடிதத்தின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின் படி அனைத்து இனங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும் போதும், ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என பள்ளி கல்வித்துறை இயக்குனர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School education dept order everyone should sign in Tamil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->