தென்காசி : சங்கரன் கோவில் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.!
school bus accident in tenkasi sankaran kovil
தென்காசி : சங்கரன் கோவில் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே செவல்குளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான எஸ் டி பவுல் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்தவுடன் மாணவர்களை வாகனங்கள் மூலம் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஒரு வாகனம் செவல்குளம் அடுத்த கோபாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள குழந்தைகளை வீடுகளில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலை சேரும் சகதியுமாக இருந்ததால் பள்ளி வாகனம் திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பள்ளி வாகனத்திற்குள் மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வாகனத்திற்குள் சிக்கிக் கொண்ட 10 குழந்தைகளை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க தரமான சாலைகளை அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
school bus accident in tenkasi sankaran kovil