சாலையில் நடக்கவே பயம்! தொடர்ச்சியாக 3 இடங்களில் செல்போன் பறிப்பு...! - மக்கள் அதிர்ச்சி
Scared walk road Cellphones confiscated 3 places row People shocked
தூத்துக்குடி தாளமுத்துநகரில் இரவு நேரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்கள் மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
ஜே.சி. நகரைச் சேர்ந்த 63 வயதான சுந்தர்ராஜ் நேற்று இரவு சாலையில் நடந்து சென்றபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை மிரட்டி செல்போனை பறித்துச் சென்றது.

அதே கும்பல் அங்கிருந்து சில நிமிடங்களிலேயே முதல் தெருவைச் சேர்ந்த ஜெரால்ட் அலெக்சாண்டர் (60) என்பவரையும் குறிவைத்து, அவரிடமிருந்த செல்போனையும் பறித்து தப்பியது.
இதிலும் நிற்காமல், கிருஷ்ணராஜபுரம் சாலையில் சென்ற மற்றொருவரிடமும் அதே கும்பல் கைவரிசை காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு ஒரே இரவில் மூன்று இடங்களில் நடந்த இந்த சம்பவங்களில் பறிக்கப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.34 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் பறிப்பு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் மற்றும் வடபாகம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஒரே இரவில் நடந்த இந்த தொடர்ச்சியான குற்றச் செயல்கள் தூத்துக்குடி மக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்க காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
Scared walk road Cellphones confiscated 3 places row People shocked