பரபரப்பு சம்பவம்! தன் தங்கையை கேலி செய்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அதிர்ச்சி...!
a man shot dead who made fun his sister
மும்பை அருகே மும்ரா கைலாஷ்நகர் பகுதியில், ஒரு இளம்பெண்ணை தொடர்ந்து கேலி செய்து வந்த சிலரின் செயல், இறுதியில் கொடூர சம்பவமாக மாறியுள்ளது.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.அந்த இளம்பெண் சந்தித்த அவமதிப்பை, தன்னை அண்ணனாகக் கருதிய ஜெயன் சிவானந்தன் நாயர் (51) என்பவரிடம் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை பலமுறை எச்சரித்தும் அவர்கள் தங்கள் நடத்தை மாற்றாமல் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, பள்ளி ஒன்றின் பின்புறம் நின்றிருந்த அப்துல்அசன், அக்பர்அப்துல் மற்றும் சமீர்அகமது ஆகியோரிடம் ஜெயன் மீண்டும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு திடீரென மோசமடைந்து, ஆத்திரம் அடைந்த ஜெயன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மூவரையும் நோக்கி சுட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அக்பர்அப்துல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய ஜெயனை காவலர்கள் விரைவாக கைது செய்தனர். இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
a man shot dead who made fun his sister