#திருப்பத்தூர் || பட்டியலின "பெண் ஊராட்சி மன்ற தலைவர்" மாயம்! கணவர் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மலை கிராமமான நாய்க்கனேரி  ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த இந்துமதி பாண்டியன் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்தனர். இந்துமதி பதவி ஏற்க விடாமல் மாற்று சமூகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

மேலும் ஊருக்குள் விடாமல் இவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் ஆம்பூர் அருகே சோலூர் என்ற ஊராட்சியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி மாலை முதல் மனைவி இந்துமதி காணவில்லை என அவருடைய கணவர் பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அச்சுறுத்தி வந்ததாக குறிப்பிட்டு பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதியின் கணவர் பாண்டியன் புகாரில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் காணாமல் போய் உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC Panchayat Council President is missing in Tirupattur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->