சி.பி.சி.ஐ.டி., வழக்கை நியாயமாக நடத்தும் என்று நம்பிக்கை இல்லை; சவுக்கு சங்கர் பேட்டி..!
Savukku Shankar says he does not have confidence that the C.B.C.I.D. will conduct the case fairly
சி.பி.சி.ஐ.டி., விசாரணை மீது நம்பிக்கை இல்லை என 'யு டியூபர்' சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.சவுக்கு சங்கர் வீட்டில், கழிவு நீர் கொட்டி, அறைகளில் மலத்தை வீசிய, ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். குறித்த அட்டூழியத்தை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், இன்று சென்னை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சவுக்கு சங்கர் கூறியதாவது: சட்டப்படி விசாரணை நடத்த வேண்டியது அவர்களது கடமை என்றும்,. என் வீட்டில் கழிவு நீர் கொட்டிய விவகாரம் தொடர்பாக சரியான விசாரணை நடைபெறவில்லை எனவும், சி.பி.சி.ஐ.டி., இந்த வழக்கை நியாயமாக நடத்தும் என்று நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவருடைய புகாரில் 'என் வீட்டின் கதவு உடைக்கப்பட்டது. 50 பேர் கும்பலாக வந்து என் தாய் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள் என்று கூறியுள்ளேன்' என்று தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பில் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்து அகில இந்திய அளவில் தன்னை தலைவராக ஆக்க வேண்டும் என முயற்சி செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, தி.மு.க., தவிர அனைத்து கட்சி தலைவர்களும் கண்டித்து விட்டார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இதில் சம்பந்தபட்ட அனைவரையும் கைது செய்து விட்டோம் என்று சொல்வது தான் அரசியல் தலைவருக்கான கடமை எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆட்சியில் நடப்பது எதுவுமே தமிழக முதல்வருக்கு தெரிவதில்லை என்று நிருபர்களிடம் சவுக்கு சங்கர் மேலும் கூறியுள்ளார்.
English Summary
Savukku Shankar says he does not have confidence that the C.B.C.I.D. will conduct the case fairly