சனாதன விவகாரம் - குட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி!
Sanatana issue Chennai HC Order
சனாதனம் என்பது இந்துக்கள் தேசத்திற்காக பெற்றோருக்காக செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு. இந்தக் கடமைகள் அடங்கிய தொகுப்பு அழிக்கத்தக்கவையா? என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கேள்வி எழுப்பி உள்ளார்.
நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது, அனைவரும் சமமானவர்கள் தான் என்றும் நீதிபதி சேஷசாயி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
திருவாரூர் அரசு கல்லூரியில் சனாதன எதிர்ப்பு குறித்து மாணவர்கள் கருத்தரங்கு நடத்துவது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சேஷசாயி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.
மேலும், தீண்டாமை கொடுமையை ஒழிக்க மாணவர்களை கல்லூரி நிர்வாகம் ஊக்குவிக்கலாம் என்று அறிவுரை கூறிய நீதிபதி அவர்கள், மதங்களில் உள்ள மோசமான நடைமுறைகளை களையெடுக்க வேண்டுமே தவிர, பயிரை ஏன் வேரறுக்க வேண்டும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிறரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் அரசு கல்லூரி சனாதனம் தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Sanatana issue Chennai HC Order