'சுதந்திரப் போராட்ட மாவீரனுக்கு வீரவணக்கம்'...! - அழகுமுத்துக்கோன் பிறந்தநாளில் முதலமைச்சர் விஜய் மரியாதை...! - Seithipunal
Seithipunal


சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடி வீரர்களில் ஒருவராகப் போற்றப்படும் மாவீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் மரியாதை மற்றும் வீர வணக்கத்தை செலுத்தியுள்ளார்.

அந்த பதிவில், ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக முதன்முதலில் விடுதலை முழக்கத்தை எழுப்பிய துணிச்சல்மிக்க போராளிகளில் மாவீரர் அழகுமுத்துக்கோன் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த அழகுமுத்துக்கோன், தமிழகத்தின் வீர மரபு, தன்னம்பிக்கை மற்றும் சுதந்திர உணர்வின் அடையாளமாக விளங்கியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடிமைத்தனமான வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதைவிட, சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பணிப்பதே உயர்ந்தது என்பதை தனது வாழ்வாலும் போராட்டத்தாலும் உலகிற்கு உணர்த்திய மாவீரர் என்றும் பாராட்டியுள்ளார்.

மேலும், தாய்நாட்டின் விடுதலைக்காக இறுதிவரை போராடிய அவரது ஒப்பற்ற வீரம், தன்னலமற்ற தியாகம் மற்றும் அசைக்க முடியாத தேசப்பற்று, தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத புகழுடன் நிலைத்திருக்கும் என்றும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salute freedom fighter Chief Minister Vijay pays tribute Azhagumamuthukon his birthday


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->