திடீர் லண்டன் பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்...! என்ன காரணம் தெரியுமா...? - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கடந்த 4-ஆம் தேதி இரு வார பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தின் போது அவர் லண்டனில் தங்கி வருகிறார்.

மு.க. ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு துறையில் தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

அவருக்கான பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக மு.க. ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றார். காலை 9.50 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவருடன் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 10 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.உதயநிதி ஸ்டாலினை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

பட்டமளிப்பு விழா உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளை நிறைவு செய்த பின்னர், மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் வரும் 18-ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi Stalin made sudden trip London Do you know reason


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->