சேலம் : 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி.. மாணவன் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கங்காணியூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 45) வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருடைய 15 வயது மகன் கே.ஆர் தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மனம்முடைந்த மாணவன் பெற்றோரிடம் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். இதனைப் பார்த்து அச்சு படைத்த பெற்றோர் கதவைத் தட்டி உள்ளனர் ஆனால் மாணவன் கதவை திறக்கவில்லை. 

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அங்கு மாணவன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனையடுத்து மாணவனை உடனடியாக மீட்ட பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem student suicide 10th fail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->